இரு சக்கர வாகனத்தின் முன்பகுதியில் உள்ள எண்ணை ஆங்கிலத்திலும், பின்பகுதியில் தமிழிலும் எழுதிய இளைஞருக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் கந்தசாமி அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரது வாகனத்தின் எண்ணானது முன்பகுதியில் ஆங்கிலத்திலும், பின்பகுதியில் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. அதனை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கந்தசாமி பார்த்து, அந்த வாலிபரின் வாகனத்தை நிறுத்தி அது குறித்து கேட்டார்.
அதற்கு அந்த இளைஞர் அமைதியாக நிற்க “நாம் தமிழர் தான், தமிழ் மொழி உயிர் மொழி தான் ஆனால் உலத்திற்கு ஒரு பொதுவான மொழி இருக்கிறது என்றும் ஏதேனும் ஒரு அசாம்பவிதம் நடந்தால் இந்த எண்ணை வைத்து என்ன செய்ய முடியும் என்று கூறி அவருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் தமிழில் எழுதப்பட்டிருந்த எண்ணை உடனடியாக நீக்கும்படியும் வலியுறுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.