தமிழ்நாடு

தடாலடியாக பிரேக் போட்டதால் தவறி விழுந்து குழந்தை பலி

தடாலடியாக பிரேக் போட்டதால் தவறி விழுந்து குழந்தை பலி

webteam

இருச்சக்கர வாகனத்தில் முன் அமர்ந்து இருந்த இரண்டு வயது குழந்தை பிரேக் பிடிக்கும் போது தவிறி விழுந்து பலியானது.

இருச்சக்கர வாகன பயணங்கள் மிகவும் ஆபத்தானவை என்பது தெரிந்தும் மக்கள் அதிக அலட்சியத்துடன் தான் அவற்றில் பயணிக்கின்றனர். இவ்வாறான அலட்சியத்தால் சென்னையில் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். இவர் தனது குடும்பத்துடன் கோயம்பேட்டிலுள்ள மெட்ரோ குடியிருப்பில் வசித்த வருகிறார். இவரும் அவரது மனைவியும் தனது இரண்டு வயது பெண் குழந்தையுடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். குழந்தையை இருச்சக்கர வாகனத்தில் முன்புறத்தில் அமர வைக்கப்பட்டிருந்தது. 

இவர்கள் நெற்குன்றம் அருகே மதுரவாயல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வெங்கடேசன் முன்னால் செல்லும் வாகனத்தில் இடிக்காமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது இருச்சக்கர வாகனத்தில் முன்னால் அமர்ந்திருந்த குழந்தை தூக்கி வீசப்பட்டது. சாலையில் விழுந்த குழந்தை தலையில் அடிப்பட்டதால் சம்பவம் நடந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தது. தங்கள் கண் முன்னே குழந்தை தவறி விழுந்து இறந்ததைக் கண்ட பெற்றோர் கதறி அழுதனர். 

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோயம்பேடு போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருச்சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என்ற போக்குவரத்து விதி உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் இதை பின்பற்றாமல் குழந்தைகளை முன்னால் அமரவைத்து சென்று கொண்டு தான் இருக்கின்றனர். 

அவர்களுக்கு இந்தச் செய்தி ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை விபத்துகளில் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டாலும் அவை அனைத்தும் மக்களின் சிறிய அலட்சியங்களிலிருந்தே தொடங்கின்றன. இதனால் மக்கள் சாலை பயணத்தின் போது அலட்சியத்தை தவிர்த்தால் இதுபோன்ற உயிர் பலிகளை தடுக்கமுடியும்.