தமிழ்நாடு

லவ் மேட்டரு ஃபீலாயிட்டாரு: மெரினாவில் போலீஸ்காரர்கள் வெறித்தன ஃபைட்!

லவ் மேட்டரு ஃபீலாயிட்டாரு: மெரினாவில் போலீஸ்காரர்கள் வெறித்தன ஃபைட்!

Rasus

பொதுஇடத்தில் மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அதை போலீசார் தீர்த்து வைப்பதை பார்த்திருப்போம். ஆனால், போலீசாரே கட்டிப்புரண்டு சண்டை போட்டால்? 

சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு ரோந்து பணியில் இரண்டு போலீஸ்காரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதை வேடிக்கை பார்த்தபடியே சென்றனர். ஆனாலும் இதைக் கண்டுகொள்ளாத போலீசார் இருவரும் கோபத்தின் உச்சியில் இருந்ததால் தங்கள் சண்டையை வெறித்தனமாகத் தொடர்ந்தனர். காதல் பிரச்னையில் இந்த சண்டை நடந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சண்டையை விலக்கி விட்டார்.

பொதுவாக மெரினாவில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போலீசாரின் கடமை. ஆனால் போலீசார் இருவர்  பொறுப்பை மறந்து சண்டை போட்டுள்ளதால், அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.