தமிழ்நாடு

திருச்சி: சிறுத்தை தாக்கி இருவர் காயம்; எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை தண்டோரா

திருச்சி: சிறுத்தை தாக்கி இருவர் காயம்; எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை தண்டோரா

JustinDurai
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிறுத்தை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.
ஆங்கியம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், சிறுத்தையை அப்பகுதியில் உள்ள மலைக்குன்றில் தேடி அலைந்தனர். அப்போது புதர் ஒன்றிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென வெளியேறி ஹரிபாஸ்கர், துரைசாமி ஆகியோரைக் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியது.
காயமடைந்த இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் மக்கள் நடமாட வேண்டும் என வனத்துறையினர் தண்டோரா மூலம் எச்சரித்தனர்.