தமிழ்நாடு

மாணவியிடம் 1 லட்சத்து 70 ஆயிரம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

மாணவியிடம் 1 லட்சத்து 70 ஆயிரம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

webteam

குலசேகரம் அருகே மாணவியிடம், புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட போவதாக மிரட்டிய பள்ளி மாணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் சஜின் மற்றும் சரண். இதில் சரண் என்பவர் பத்தாம் ‌வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சுழலில் இவர்கள் இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படிக்கும் மா‌ணவியிடம் செல்ஃபோனில் தொடர்பு கொண்டு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். மேலும் பணத்தை தர மறுத்தால் மாணவியின் புகைப்படத்தை தவறாக மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்ததை எடுத்து கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை செய்தனர். அப்போது சஜின் என்பவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. 

பின்னர் 10 வகுப்பு படிக்கும் மாணவன் சரணை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் தலைமறைவாகியிருந்த சஜினையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கோவை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த சஜினை கைது செய்து ஒரே இடத்தில் வைத்து குலசேகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.