தமிழ்நாடு

கோவை: இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி - மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால்

கலிலுல்லா

கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபல் தெரிவித்துள்ளார்.மேலும் கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெளியில் வரும் போது முககவசம் அணிய வேண்டும் ,வீட்டினை சுத்தமாக வைக்க வேண்டும் மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்துயுள்ளார்.

மேலும் காய்ச்சல் ,இருமல் ,தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகி சிகிச்சை பெறுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.