தமிழ்நாடு

கொசுவர்த்தியால் ஏற்‌பட்ட விபரீதம்: இருவர் உயிரிழப்பு

கொசுவர்த்தியால் ஏற்‌பட்ட விபரீதம்: இருவர் உயிரிழப்பு

webteam

சென்னையை அடுத்த தாம்பரத்தில், கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 

தாம்பரம் கஸ்தூரிபாய் நகர் 5 வது குறுக்குத் தெருவை சேர்ந்த ஹபீப் முகம்மது என்ற 90 வயது முதியவரும், அவரது மகள் மெகருன்னிசாவும் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கொசுத்தொல்லைக்காக கொசுவர்த்தி ஏற்றிவிட்டு தூங்கிய நிலையில், கொசுவர்த்தியின் தீக்கனல் பட்டு படுக்கை தீப்பிடித்தது. அருகில் இருந்த மண்ணெண்ணெயால் தீ வேகமாக பரவ, ஹபீப் முகமதுவும், மெகருன்னிசாவும் தீயில் சிக்கிக்கொண்டனர். 

அப்போது அலறல் சப்தம்‌கேட்டு இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள், அவர்களை குரோம்பேட்டை மருத்து‌மனையில் அனுமதித்தனர். 65% மேல் தீக்காயம் இருந்ததால் இருவரும் கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹபீப் முகமது உயிரிழந்தார். இந்நிலையில் காயத்துடன் போராடிக்கொண்டிருந்த அவரது மகள் மெஹருன்னிசாவும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.