காற்றழுத்த தாழ்வு பகுதி web
தமிழ்நாடு

வங்கக்கடல் | அடுத்தடுத்து 2 புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என கணிப்பு!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.

PT WEB

தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 15ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சுயா தீனவானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்தெரிவித்துள்ளார். இதனால், 15ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என தெரிவித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை

மூன்றாம் சுற்று வடகிழக்கு பருவமழை 16ஆம் தேதியில்இருந்து தொடங்கி, தமிழகம் முழுவதும் நல்ல மழையை கொடுக்கும் எனவும், வடகடலோர மாவட்டங்கள், காவிரி படுகை மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் இரண்டு காற்றழுத்ததாழ்வு பகுதிகள் உருவாகக்கூடும் என்றும் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.