தமிழ்நாடு

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 புகார்கள்

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 புகார்கள்

JustinDurai

பாலியல் தொல்லை வழக்கில் சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

புதிய புகார்கள் தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் அசோக்நகர் மகளிர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புகார்கள் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சிறையில் உள்ள ராஜகோபாலனை, காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரில் , சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.