முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 2 எம்பிக்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக தலைமைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நேற்று ஒரே நாளில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் 4 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில், அவருக்கு மேலும் 2 எம்பிக்கள் இன்று ஆதரவு தெரிவித்துள்ளனர். வேலூர் எம்பி செங்குட்டுவன் மற்றும் தூத்துக்குடி எம்பி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி ஆகியோர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.