தமிழ்நாடு

தகாத உறவால் அவமானம்? - மின்கோபுரத்தில் தொங்கிய இருவர் சடலம்

தகாத உறவால் அவமானம்? - மின்கோபுரத்தில் தொங்கிய இருவர் சடலம்

webteam

ஆரணி அருகே தகாத உறவு விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் தாங்க முடியாமல் இருவர் உயர்மின் அழுத்த கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  

ஆரணி அடுத்த அரையாளம் கிராமம் காலணி பகுதி, பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுதாகர் (38). இவருக்கு உமா என்ற மனைவியும் 4 மகன்கள், 1 மகளும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி (43).  இவருக்கு மூர்த்தி என்ற கணவரும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் சுதாகருக்கும் (38) எதிர் வீட்டில் உள்ள தேன்மொழி(43) என்பவருக்கும் இடையே ஏற்கனவே பல ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுதாகருக்கும் தேன்மொழிக்கும் இருந்த தொடர்பு தற்போது வெளியே தெரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரையும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆகவே அவமானம் தாங்க முடியாமல் மனவேதனையுடன் இருந்த அவர்கள் வீட்டின் பின்புறம், தனியார் விவசாய விளை நிலத்தில் உள்ள உயர்மின் அழுத்த கோபுரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இதனைக் கண்ட ஊர் பொதுமக்கள், 2 பேரின் சடலத்தையும் மீட்டு வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார், இருவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.