மதுரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக பெண் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை பாண்டி கோவில் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக அண்ணாநகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அண்ணாநகர் காவல்துறையினர் பாண்டி கோவில் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் லாவண்யா இருவரையும் விசாரணை செய்ய அழைத்தபோது தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.
பின் இருவரையும் மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 21 கிலோ கஞ்சா மற்றும் 20 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து பணம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறை இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தற்போது விசாரித்து வருகின்றனர்.