தமிழ்நாடு

கூவம் ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் உயிரிழந்த பரிதாபம்

கூவம் ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் உயிரிழந்த பரிதாபம்

Rasus

கூவம் ஆற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதி, கூவம் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் 6 பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது கூவம் ஆற்றில் பந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரதீப், ஸ்ரீபன் என்ற 2 சிறுவர்கள், அந்தப் பந்தை எடுக்க சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்துவிட்டனர்.

அதிர்ச்சியடைந்த மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டதை அடுத்து, ரித்திஷ் என்ற சிறுவன் அவர்களை காப்பாற்ற கூவம் ஆற்றிற்குள் குதித்துள்ளார். சம்பவ இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை வீரர்கள், சகதியில் சிக்கியிருந்த பிரதீப், ரித்திஷ்குமாரின் சடலத்தை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஸ்ரீபன் என்ற மற்றொரு சிறுவன், கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.