திண்டுக்கல் அருகே கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த 2 பேர் கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதனையடுத்து திடீரென மயக்கம் அடைந்த அவர்கள் அதன்பின் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களும் மதுரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
கள்ளச் சாராயத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லாத நிலையில் அதனை காய்ச்சியது யார் என்பதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிகிறது.