தமிழ்நாடு

பஞ்சு ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி

பஞ்சு ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி

Rasus

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பஞ்சு ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்தனர்.

தொடர்மழையினால் பஞ்சு ஆலையின் ஒருபக்க சுற்றுச்சுவர் சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்தது. மறுபக்க சுற்றுச்சுவரும் வலிமையிழந்து காணப்பட்டதால், அதை சீரமைக்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆகவே, அதன் அருகே மக்கள் செல்ல வேண்டாம் என பஞ்சு ஆலை நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதனையும் மீறி இருவர் அங்கே சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஈரப்பதத்தால் வலிமையிழந்த அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதில், இடிபாடுகளில் சிக்கிய அவர்கள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.