தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் பலி

மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் பலி

Rasus

மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த முருகன் என்பவரின் ஒரு வயது குழந்தை சக்திவேல் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல் மதுரை அழகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் விஜயலட்சுமி வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 5 பேர் பன்றி காய்ச்சலுக்கும் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் 98 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.