தமிழ்நாடு

பொம்மையர்பாளையம் இளம்பெண்ணை எரித்துக் கொன்ற கும்பல் கைது

பொம்மையர்பாளையம் இளம்பெண்ணை எரித்துக் கொன்ற கும்பல் கைது

Rasus

விழுப்புரம் மாவட்டம் பொம்மையர்பாளையத்தில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி எரித்துக் கொன்ற இளைஞரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் ஓடைப்பகுதியில் கடந்த 29-ஆம் தேதி எரியூட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 2 நாள் விசாரணைக்குப்பின், எரியூட்டப்பட்ட பெண், கூனிமேடு பகுதியைச் சேர்ந்த 20 வயது லட்சுமி என்பது தெரியவந்தது. அவரது மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அருண் என்பவர் லட்சுமியை 5 ஆண்டுகளாக காதலித்ததாக தெரியவந்தது.

இந்நிலையில் லட்சுமி கருத்தரித்ததால் அருணிடம் திருமணத்திற்கு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருண், தனது நண்பர் அப்துல் ரகுமானுடன் சேர்ந்து பொம்மையார்பாளையம் அருகே உள்ள முந்திரி காட்டுக்கு லட்சுமியை அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ளார். குற்றத்தை மறைக்க, லட்சுமியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததும் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அருண், அவரது நண்பர் அப்துல் ரகுமான் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.