தூத்துக்குடியில் போலி கிருமிநாசினி தயாரித்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கொரோனா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள, கைகளை கிருமிநாசினிகளைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. கிருமிநாசினிகளை இதனால் சிலர் கிருமிநாசினிகளை அதிக விலைக்கு விற்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணமும் உள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் போலி கிருமிநாசினிகள் தயாரிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், போலி கிருமிநாசினிகளை தயாரித்துக் கொண்டிருந்த ஞான கிஷோர்ராஜ் மற்றும் ஜான் பெனடிக்ட் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கலப்படம் செய்ய வைத்திருந்த 500 லிட்டர் எண்ணெய்யும் பறிமுதல் செய்யப்பட்டது.