கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாளையொட்டி hbdkalaignar95 என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இன்று 95வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளங்களில் HBDKalaignar95 என்ற பெயரில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. சமூக வலைத் தளங்களில் அன்றாடம் அதிக அளவில் குறிப்பிட்ட ஒரு நிகழ்வு ட்ரெண்டிங் ஆவது வழக்கம். இன்று கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தேசிய அளவில் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் HBDKalaignar95 என்ற பக்கம் ட்ரெண்டிங்காகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் hbdkalaignar95 என்ற ஹேஷ்டேகில் கருணாநிதிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்பட கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.