தமிழ்நாடு

ஒரே மதிப்பெண்கள்.. வியப்பில் அசத்திய இரட்டையர்கள்

ஒரே மதிப்பெண்கள்.. வியப்பில் அசத்திய இரட்டையர்கள்

Rasus

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று இரட்டை சகோதரிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்த தம்பதியினர் சீனிவாசன் – சாந்தி . இவர்களுக்கு கார்த்திகா, கீர்த்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த மாணவிகள் இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தனர்.

இந்தாண்டு நடைப்பெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வைவும் இந்த இரட்டை சகோதரிகள் சேர்ந்த எழுதினேர். இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் இரட்டையர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றனர். கார்த்திகா பெற்ற மதிப்பெண்கள் 1,117. கீர்த்திகாவும் அதே 1,117 மதிப்பெண்களை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.