தங்கத் தேர் இழுத்த தவெக மகளிர் அணியினர் pt desk
தமிழ்நாடு

நடிக்க வந்து 32 ஆண்டுகள் நிறைவு... நடிகர் விஜய்க்காக தங்கத் தேர் இழுத்த தவெக மகளிர் அணி!

நடிகர் விஜய்க்காக தங்கத் தேர் இழுத்த தவெக பெண் நிர்வாகிகள்... கூட்டத்தை விலக்கிக் கொண்டு பசியோடு வந்த மாடுக்கு உணவும் அளித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் முடிந்து 33 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இதை கொண்டாடும் விதமாக அக்கட்சியைச் சேர்ந்த சென்னை புறநகர் மாவட்ட மகளிரணி பவித்ரா தமிழரசன் ஏற்பாட்டில் மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பாடு நடத்தப்பட்டுள்ளது.

தங்கத் தேர் இழுத்த தவெக மகளிர் அணியினர்

இதில் அக்கட்சியைச் சேர்ந்த மகளிரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டு தங்க தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வந்தனர். பின்னர் ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். .

அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு பசியோடு வந்த பசுமாட்டிற்கு தவெக-வினர் உணவளித்த சம்பவமும் நடந்தது