தவெக தலைவர் விஜய் pt
தமிழ்நாடு

நீங்கள் ரசிகர்கள் இல்லை.. 𝗩𝗜𝗥𝗧𝗨𝗔𝗟 𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥𝗦! - திடீரென வீடியோவில் தோன்றிய விஜய்!

கட்சி நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் தெரிவித்தது என்ன ? பார்க்கலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக செயல்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் , காணொளி வாயிலாக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் காணொளி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ இந்தியாவிலேயே மிகப்பெரிய சோசியல் மீடியா படை தவெக ஐடி விங் தான். நீங்கள் இனி ரசிகர்கள் இல்லை. மெய் நிகர் போர் வீரர்கள் ​​(𝗩𝗜𝗥𝗧𝗨𝗔𝗟 𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥𝗦) என அழைக்கத் தோன்றுகிறது. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.