கோவை சரவணம்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் உரையாற்றிய கட்சியின் தலைவர் விஜய், தவெக அரசியல் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது என்றும், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் ஊழல் இருக்காது எனவும் குறிப்பிட்டார். வாக்குச்சாவடி முகவர்கள் தைரியமாக மக்களை சந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட விஜய், குடும்பம் குடும்பமாக வந்து தவெகவுக்கு மக்கள் வாக்களிப்பதை வாக்குச்சாவடி முகவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். வாக்குச்சாவடி முகவர்கள்தான் கட்சியின் முதுகெலும்பு என்றும் விஜய் தெரிவித்தார்.