தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுகுழு கூட்டம் வருகின்ற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு வரும்போது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக கொண்டு வர கட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, திமுக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலின்போது மாவட்டங்களுக்கு வழங்கபட்ட வாக்குறுதிகளில் எதை எதை நிறைவேற்றவில்லை என்ற விவரங்களையும், தற்போது வரை மாவட்ட செயலாளர்கள் செய்துள்ள போராட்டங்கள், இதன் பின் எந்த எந்த பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்த உள்ளனர் என்பது குறித்தான விவரங்களையும் அறிக்கையாக கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.