V.S. Babu Pt web
தமிழ்நாடு

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ் பாபு காலமானார்!

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார்.

PT WEB

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார்.

இன்று (நவம்பர் 19) பிற்பகல், 2.24 மணிக்கு அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மூச்சுத்திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, 72 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்தச்சூழலில் தான், அவரது உடல் தேறிவந்ததாக செப்டம்பர் 22-ம் தேதி வரை மருத்துவமனையின் அறிக்கைகள் வெளியாகி வந்தன. ஆனால், அதன் பிறகு எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

இந்தச்சூழலில் தான், தற்போது வி.எஸ்.பாபு மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.