தமிழ்நாட்டில் எல்லார் கண்ணும் மதுரை மாநகரத்து மேலதான் இருக்கு.... தவெகவோட இரண்டாவது மாநில மாநாடு, மாஸ் காட்டிட்டு இருக்கு... இது ஜஸ்ட் ஒரு மீட்டிங் இல்ல, விஜய்யோட வேற லெவல் பொலிட்டிக்கல் என்ட்ரினு தொண்டர்களும் ரசிகர்களும் FULL VIBE-ல இருக்காங்க... இதோ அந்த VIBE-அ அப்படியே கடத்தி கொண்டு வந்து இருக்கோம்..
விக்கிரவாண்டில தவெகவோட முதல் மாநாடு 120 ஏக்கர் பரப்பளவுல நடந்துச்சு... ஆனா, இந்த முறை மதுரைல 700 ஏக்கர். அதுல 250 ஏக்கர்ல மாநாடு, 450 ஏக்கர்ல பார்க்கிங்.. இரவில் மின்னொளியில ஜொலித்த மாநாட்டுத் திடல பாருங்க... மாநாட்டோட மெயின் அட்ராக்ஷன்,விஜய்யோட 350 மீட்டர் ராம்ப் வாக்! போன முறை மாதிரி ராம்ப் வாக் மேடையில தொண்டர்கள் ஏறிடக் கூடாதுன்னு, 10 அடி இடைவெளியும், 8 அடி உயர தடுப்புகளும் போட்டு செம செக்யூரிட்டி கொடுத்திருக்காங்க. மாநாட்டுத் திடல்ல பொண்ணுங்களுக்காக ஸ்பெஷலா 3 பிங்க் ரூம்ஸ் ரெடி பண்ணி இருக்காங்க.
400 கழிப்பறைகள்னு எல்லாமே டாப் நாட்ச்னு சிலாகிக்கிறாங்க நிர்வாகிகள். திடல்ல தண்ணிப் பஞ்சம் வராம இருக்க, அந்தந்த கேலரிகள்ல குடிநீர் கிடைக்க 600 குழாய்கள், 100 குடிநீர் டேங்குகள் 5 லட்சம் வாட்டர் பாட்டில்கள், 2 லட்சம் ஸ்நாக்ஸ் பாக்கெட்கள்னு வெயிட்டா பண்ணி இருக்காங்க. முக்கியமா, மெடிக்கல் எமர்ஜென்சிக்கு 25 கிலோ எடைய தூக்குற திறன் கொண்ட ட்ரோன் யூஸ் பண்ண போறாங்க. அதுமட்டுமில்ல அவசர மருத்துவ தேவைக்கு 20 கூடாரங்கள உருவாக்கி இருக்காங்க.. 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் தயார்படுத்தி இருக்காங்க. ஆம்புலன்ஸ்கள் சென்று வர தனி ரூட்டும் ரெடி.
மின்சார தேவைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஜெனரேட்டர்கள்னு பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் கூடுதலாவே இருக்கு.. மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் நுழைய 7 வழிகளும் தலைவர் விஜய் வந்து செல்ல தனி வழியும் தயார் பண்ணி இருக்காங்க.. கூட்டத்தை மேனேஜ் பண்ண 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்கள களத்துல இறக்கி இருக்கு தவெக.
இந்த மாநாடு விஜய்-க்கு அரசியலில் பிளாக் பஸ்டர் வெற்றிய கொடுக்குமானு தவெகவினர் மட்டுமல்ல மற்ற கட்சிக்காரங்களும் உன்னிப்பா கவனிச்சுட்டு இருக்காங்க.. மாநாட்டுக்காக மதுரை நட்சத்திரவிடுதியில விஜய் தயாராக இருக்க, அவர் பாணியிலேயே "I AM WAITING" VIBEலயே ஒவ்வொரு தவெக தொண்டர்களும் ரசிகர்களும் இருக்காங்க..