ஈழத்தில் உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவுக்கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதைக் குறிக்கும் விதத்தில் தவெக தலைவர் விஜய் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மாவீரம் போற்றதும், மாவீரம் போற்றதும் என இன்று பதிவிட்டுள்ளார்.