தவெக தலைவர் விஜய் இன்று மதியம் 1 மணி அளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக ஆளுநர் தரப்பிலிருந்து தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை தவெக தலைவர் விஜய் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடிதம் ஒன்றினை எழுதி வெளியிட்டிருந்தார். மேலும், விஜய் எழுதிய கடிதம் நகலெடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெண்களிடம் கொடுப்பட வேண்டும் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்படிருந்தது. இந்நிலையில், தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த சந்திப்பில், அண்ணா பல்கலை.கழக பாலிய வன்கொடுமை தொடர்பாகவும், தமிழக சட்ட ஒழுங்கு பிரச்னை, பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சரியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து பேசப்படவுள்ளதாக தெரிகிறது.தவெக தலைவராக பொறுப்பேற்றபிறகு தமிழக ஆளுநரை விஜய் சந்திப்பது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.