பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களை, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனியார் மண்டபத்தில் சந்திக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை சந்திக்க தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். போராட்டக்குழுவினர் விஜயை சந்திக்கும் இடம் தொடர்பாக குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்றிரவு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகத்துடன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், பாதுகாப்பு கருதி தனியார் மண்டபத்தில் கிராம மக்களை சந்திக்க விஜய்க்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளதாகவும், இன்று நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.