தவெக தலைவர் விஜய் Pt web
தமிழ்நாடு

”என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே., முதல்வர் பேசியது சிலப்பதிகார வசனமா?” - விஜய்.!

தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில், அதற்கு விளக்கமளித்து இன்றைய ஈரோடு பரப்புரையில் விஜய் பேசியிருக்கிறார்.

PT WEB

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில், புதிதாக தொடங்கப்பட்டு தேர்தலை நோக்கிக் காத்திருக்கும் தவெக முதல் தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கிருக்கின்றன. அந்தவகையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு மீண்டும் பரப்புரையை தொடங்கியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். இந்த நிலையில், விஜயின் பரப்புரைகளின் மீது குறைவாக பேசுகிறார், சினிமா வசனம் போல பேசுகிறார் போன்ற விமர்சனங்கள் பல தரப்பிலிருந்தும் முன்வைக்கபட்டு வருகின்றன. இந்த நிலையில் தான், இன்று ஈரோட்டில் நடந்திருக்கும் பரப்புரையில் அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து தவெக தலைவர் விஜய் பேசியிருக்கிறார்.

தவெக பரப்புரை

ஈரோடு பரப்புரையில் விமர்சனங்களுக்கு விளக்கமளித்துப் பேசிய விஜய், “ எதிரிகள் யாரென்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். 2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை மட்டும்தான் எதிர்க்க முடியும். சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது. எத்தனை வாக்குறுதிகள் கொடுத்தார்கள். சொன்னார்களே செய்தார்களா? மஞ்சள் விவசாயத்திற்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு நெல்லுக்கு அரசு விலை நிர்ணயிக்கிறது. ஆனால், அதிலும் ஊழல். கொள்முதல் ஒழுங்காக நடப்பதில்லை. தவெகவை எப்படியெல்லாம் முடக்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள்.

விஜய் அரசியல் பேசவில்லை என்கிறார்கள். சினிமா வசனம் போல் பேசுகிறார்; 10 நிமிடம்தான் பேசுகிறார் என்கிறார்கள்., நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்தித்து அவர்களது பிரச்னைகளை பேசுவது அரசியல் இல்லாமல் வேறு என்ன? சமீபத்தில் ”என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க” என முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அது என்ன சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா?” எனத் தெரிவித்துள்ளார்.