தவெக விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

புதுச்சேரி| விஜய் சாலைவலம் செல்ல அனுமதி மறுப்பு.. பொதுக்கூட்டம் மட்டுமே நடத்த அனுமதி!

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, ஆனால் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

PT WEB

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்சாலைவலம் செல்ல காவல் துறைஅனுமதி மறுத்துள்ளது. புதுச்சேரியில் வரும் 5ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோவிற்கு அனுமதிகோரி, புதுச்சேரி டிஜிபியிடம் கட்சி நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர்.

தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தவெக பொதுச் செயலர் ஆனந்த் நேரில் சந்தித்து அனுமதி கோரிஇருந்தார்.

தவெக தலைவர் விஜய் திருச்சி பரப்புரை

இந்நிலையில், இதுதொடர்பாக, சட்டப்பேரவை வளாகத்தில் காவல் துறை மற்றும் அரசுஅதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட காவல்துறை டிஐஜி சத்திய சுந்தரம், புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்தஅனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.