கருத்துக்கணிப்பில் தவெக அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. 43.12% பேர் இதற்கு முதலிடம் அளித்துள்ளனர். முதல்வர் விஜய் அலுவலக நேர ஒழுங்குக்கு 12.95% ஆதரவு கிடைத்துள்ளது. மணப்பெண்களுக்கான அண்ணன் சீர், இலவச மடிக்கணினி, 200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களுக்கும் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது.
தவெக அரசின் செயல்பாடுகளில் எந்த திட்டம் அல்லது அணுகுமுறை மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது என்பதை அறியும் வகையில் பின்வருவனவற்றில் எதற்கு நீங்கள் முதலிடம் அளிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். அதில் மிக அதிகமாக 43 புள்ளி 12 சதவீதம் பேர் ஊழலுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
முதல்வர் விஜய் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதற்கு 12 புள்ளி 95 பேர் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். மணப்பெண்களுக்கான அண்ணன் சீர் திட்டத்துக்கு 9 புள்ளி 87 சதவீதம் பேரும், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 7 புள்ளி 9 சதவீதம் பேர் முதலிடம் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் திட்டத்துக்கு 5 புள்ளி 79 சதவீதம் பேரும், பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு 6 புள்ளி 62 சதவீதம் பேரும் முதலிடம் வழங்கியுள்ளனர்.
அதேபோல முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல் நூறு நாள்களை நிறைவு செய்துள்ள நிலையில் அரசின் செயல்பாட்டை எவ்வாறு மதிப்பிடுவீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு மிக நன்று என்று 30 புள்ளி 06 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 28 சதவீதம் பேர் ஆட்சியின் செயல்பாடு நன்று என்று பதிலளித்தனர். அதேசமயம் தவெக ஆட்சி நூறு நாள்களில் சுமாராகவே இருந்தது என 18 புள்ளி 39 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்தவர்களில் 20 புள்ளி 72 சதவீதம் பேர் தவெக ஆட்சி மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.