BY-Election Results Pt web
தமிழ்நாடு

#BY-Election Results | தாராபுரத்தில் திடீர் டிவிஸ்ட்.. மீண்டும் முன்னிலையில் தவெக!!

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

8, 302 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக பின்னடைவு!!

மதுராந்தகம் தொகுதியில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 23,885 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 2-வது இடத்தில் இருக்கும் திமுக வேட்பாளர் பரந்தாமன் 15,582 வாக்குகள் மட்டுமே பெற்று 8,302 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

மீண்டும் முன்னிலையில் தவெக..

தாராபுரம் தொகுதியில், தவெக வேட்பாளர் சத்யபாமா தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், 5 சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் பானுமதியை விட 724 வாக்குகள் அதிகமாக பெற்று மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார்.

தட்டாஞ்சாவடியை தக்க வைத்தது என்ஆர் காங்கிரஸ்..

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் காங்கிரஸ் வேட்பாளரை விட 8,784 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், தட்டாஞ்சாவடியை தக்க வைக்கிறது என்.ஆர். காங்கிரஸ்

தாராபுரம் முன்னிலை நிலவரம் - அதிமுக முன்னிலை 

அதிமுக : 11,837

தவெக : 11358

திமுக : 9846

நாதக : 861

479 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.

மதுராந்தகம் முன்னிலை நிலவரம்; 6000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார் தவெக வேட்பாளர்  

தவெக : 20,068

திமுக : 13,687

அதிமுக : 11,442

நாதக : 154

6381 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருக்கிறார்.

தாராபுரம் முன்னிலை நிலவரம்

அதிமுக : 9,308

தவெக : 8,977

திமுக : 7,098

நாதக : 521

331 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.

மதுராந்தகம் முன்னிலை நிலவரம்

தவெக : 15,509

திமுக : 11,187

அதிமுக : 9,691

நாதக : 154

4322 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருக்கிறார்.

தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி முகம்!!

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 6,950 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் பாஜக முன்னிலை..

மேற்கு வங்கத்தில், நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலிலும், பாஜக வேட்பாளர்களான ஹசிராணி ரத் மற்றும் சாகரவ் சர்க்கார் ஆகியோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர்.

600 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை..

தாராபுரம் தொகுதில் 600 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சுகன்யா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதேசமயம், மதுராந்தகம் தொகுதியில் தவெக தொடர் முன்னிலையில் இருக்கிறது.

சுயேட்சை வேட்பாளர் வெளியேற்றம்..

மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். பழுதடைந்த வாக்கு இயந்திரத்தின் விவி பேட் தாள்களை எண்ணக் கோரியதாகவும், முதல் சுற்றை முழுமையாக முடிக்காமல் 2-வது இடத்திற்கு சென்றதாகவும் செய்தியாளர்களை சந்தித்த அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

தாராபுரத்தில்  அதிமுக முன்னிலை

தாரபுரத்தில் தவெகவை பின்னுக்குத் தள்ளி, அதிமுக வேட்பாளர் பானுமதி முதல் இடத்திற்கு சென்றிருக்கிறார். தவெக வேட்பாளர் சத்யபாமா 6,384 வாக்குகளை பெற்றிருக்கும் நிலையில், பானுமதி 6,450 வாக்குகள் அதாவது 66 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை விறுவிறு

ஈவிஎம் வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாராபுரம் 2-வது இடத்தில் அதிமுக

2வது சுற்று முடிவில், தாராபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள பானுமதி 4,739 வாக்குகளைப் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் தவெக வேட்பாளர் 6,284 வாக்குகளையும், திமுக வேட்பாளர் சுகன்யா 3,673 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

ஈவிஎம் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இரு தொகுதிகளிலும் தபால் வாக்கு வாக்குகளைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

என்ஆர் காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், தபால் வாக்கு எண்ணிக்கையில் என்ஆர் காங்கிரஸ் முன்னிலை.

மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு

மதுநாந்தகத்தில் உள்ள ஒரு ஈவிஎம் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. 11வது மேசையில் உள்ள இயந்திரத்தில் பழுது ஏற்பட்டிருக்கும் நிலையில், விவி பேட்-ல் உள்ள தாள்களை வைத்து வாக்குகள் பின்னர் எண்ணப்படும்.

தமிழ்நாட்டில் இருதொகுதிகளிலும் தவெக முன்னிலை.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், 3,571 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். தாராபுரம் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா 342 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். இரு தொகுதிகளிலும், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் முறையே 2 வது மற்றும் 3வது இடத்தில் இருக்கின்றனர்.

இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி மேற்குவங்கத்தில் ரெஜிநகர் மற்றும் நந்திகிராம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள நாகௌன் மக்களவைத் தொகுதிக்கும் கடந்த அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.