தவெக மாநில மாநாடு pt web
தமிழ்நாடு

தவெக | மாநாடு தொடங்கும் நேரம் திடீர் மாற்றம்.. காரணம் என்ன?

விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மாலை 3 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுத் திடலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகாலை முதலே ஆயிரக்கணக்காணோர் மாநாட்டுத் திடலில் குவிந்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக மாலை 4 மணியளவில் தொடங்க இருந்த மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாக மாலை 3 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கப்பட உள்ளது. மாலை 4 மணிக்கு கட்சியின் கொடியேற்றிய பின்னர் மாலை 6 மணிக்கு கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்கள் காலை முதலே மாநாட்டுத் திடலில் குவியத்தொடங்கியுள்ள நிலையில், அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்க வேண்டாம் என முன்கூட்டியே மாநாடு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.