தவெக தலைவர் விஜயின் பரப்புரை சுற்றுப்பயண திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அவர் 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி வரை திட்டமிட்டிருந்த விஜயின் பரப்புரை, பிப்ரவரி 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி18 நாட்கள் சனிக்கிழமைகளிலும், இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
டிசம்பர் 20ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் முடிந்த பிறகு ஜனவரி 24ஆம் தேதி மதுரை, தேனியில் பரப்புரையை தொடங்குகிறார். பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில் தன்னுடைய பரப்புரையை விஜய் நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.