தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் web
தமிழ்நாடு

’எம்ஜிஆரை போல விஜய் ஆட்சியை பிடிப்பார்..’ - தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்!

தன்னுடைய துறையின் மானிய கோரிக்கை விவாதத்திற்கு வராத உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு போட்டியில்லை என தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பேசியுள்ளார்.

PT WEB

2026-ம் ஆண்டுக்கான தமிழக அரசியல் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த சூழலில் தவெக நிலைப்பாடு குறித்தும், மற்ற கட்சிகள் குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் புதிய தலைமுறை உடன் பேசியுள்ளார்.

எம்ஜிஆரை போல விஜய் ஆட்சியை பிடிப்பார்..

புதிய தலைமுறை உடன் பேசியிருக்கும் அருண்ராஜ், “1977ஆம் ஆண்டு தமிழகத்தில் நான்கு முனை போட்டி இருந்தது.. அப்போது எம்ஜிஆர் ஆட்சியை அமைத்தார் அதே போன்று தான் விஜய் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக வருவார்.

நாங்கள் தான் பாஜகவை கொள்கை எதிரி என்று தெரிவித்து விட்டோம், பிறகும் ஏன் எங்களை கூட்டணிக்கு தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அழைக்கிறார்கள் எங்களை எதிரி என்று அறிவிக்க வேண்டியது தானே..

தவெக தலைவர் விஜய்

2016-ல் கருணாநிதி ஜெயலலிதா ஆகியோர் உயிரோடு இருந்தார்கள், அதனால் மக்கள் நல கூட்டணி மூன்றாவது அணியாக இருந்து, ஆளுங்கட்சி ஆட்சி அமைக்க உதவியாக இருந்தது. ஆனால் தற்போது அது போன்று இல்லை நாங்கள் தான் ஆட்சியை அமைப்போம்..

முதலமைச்சர் வொர்க் ப்ரம் ஹோம் போன்று work from போனாக வேலை செய்து கொண்டிருக்கிறார்..

திமுகவின் உறுப்பினர்கள் குறைந்து கொண்டு செல்வதால் தான் தற்போது இளைஞர்களை ஈர்ப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்..

தமிழகத்தின் ஒரே ஆளுமை மிக்க தலைவர் விஜய்..” என்று பேசியுள்ளார்.