தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைப்பெற்று வருகிறது.
இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1,500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக தடபுலான விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும், இந்த கூட்டத்தில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில், பேசிய , தவெக ஆதவ் அர்ஜூனா,
"ஹிட்லர், முசோலினி அரசியல்போல் மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது; கேள்வி கேட்க ஆளே இருக்கக்கூடாதென நினைக்கிறது திமுக; நாம் போராடினால் வழக்குப்பதிவு செய்வார்கள், மிரட்டுவார்கள்... அதற்கெல்லாம் அச்சப்படக் கூடாது . எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவது காட்டப்படுவதில்லை. முதல்வர் மட்டுமே பேசுவார். பல மானிய கோரிக்கைகள் ஒரே நாளில் நிறைவேற்றப்படுகின்றன. இது கலைஞர் காலத்திலும் நடக்காதது. சட்டசபையில் ஜனநாயகம் இல்லையென்றால், வீதிகளில் எப்படி இருக்கும்?.
கள்ளச்சாராய பிரச்சனையில் 70 பேர் இறந்தபோது, அதிகாரிகள் மாற்றப்பட்டனர். ஆனால் விசாரணை நடைபெறவில்லை. ஒரு பெண் புகார் அளித்தால், அவர் மீதே பழி சுமத்தப்படுகிறது. காவல்துறையை குறை சொல்ல முடியாது, ஏனெனில் அவர்களை கட்டுப்படுத்துவது ஹோம் மினிஸ்டர் தான். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன.
எங்களுடைய குறிக்கோளை எங்கள் தலைவர் ஏற்கனவே தெளிவாக வகுத்துவிட்டார். திமுக மற்றும் மத்தியில் ஆளும் பிஜேபாஜக ஆகியவை கொள்கை எதிரிகள். திமுக 70 ஆண்டுகளாக சாதி பிரச்சனைகளை உருவாக்கி, தேர்த அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது. ஆனால், எங்களுக்கு சாதி என்ற பாகுபாடு இல்லை. மனிதம் தா எங்களுக்கு முக்கியம்.
1972ஆம் ஆண்டு தீய சக்திகளையும், ஊழலையும், குடும்ப ஆட்சியையும் எதிர்த்து திரு. ராமச்சந்திரன் கட்சியை தொடங்கினார். அவரது பெயரால் அழைக்கப்படும் ராமச்சந்திரா அவையில், நமது முதல் பொதுக்குழு உதயமாகிறது. அண்ணாமலையை செட் செய்து திமுக வைத்துள்ளது; புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது எங்கள் கட்சியையும் தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிகாட்டுவோம்.
எங்களுக்கு எதிராக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஒன்றிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும், நாங்கள் தனித்து மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவோம். மக்கள் மனதில் உள்ள கேள்விகளை எங்கள் தலைவர் எழுப்புகிறார். அடுத்த 13 மாதங்களில், 70,000 பூத் உறுப்பினர்களுடன் சென்ட் ஜார்ஜ் கோட்டையில் எங்கள் தலைவரை அமர வைப்போம்," போன்று பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.