ஆதவ் புதியதலைமுறை
தமிழ்நாடு

அரசியலில் பூகம்பம் வரப்போகிறது.. திமுகவை நேரடியாக தாக்கிய ஆதவ்.. கண்ணிமைக்காமல் பார்த்த விஜய்!

ஆதவ் அர்ஜூனா உரையில் அரசியல் விமர்சனம்

ஜெனிட்டா ரோஸ்லின்

மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா நடைப்பெற்றது.

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உரை:

” தமிழகத்தின் முகம் விஜய்; தமிழகத்தின் எதிர்காலம் விஜய். மன்னராட்சி ஒழிக்கப்படவேண்டும் என்று பேசியதால் சூழ்ச்சி என்னை சூழ்ந்தது. இன்றைய அரசியல் ஊழல்வாதிகளின் கையில் இருக்கிறது.சதிகள் என்னை சூழந்தபோது அழைத்தவர் விஜய். பெரியாரை முன்னிறுத்தி அரசியல் செய்வோர் அம்பேத்கரை மேடை ஏற்றியதில்லை.

பெரியாரிஸம் பேசுபவர்கள்; ஆனால்,சாதி அரசியல் செய்வார்கள். பெரியாரையும் அம்பேத்கரையும் இணைத்து பேசும் கட்சி தவெக. சமத்துவக் கனவு கண்டார் அண்ணா. அண்ணா கண்ட கனவு நிறைவேற்றப்படவில்லை. இன்றைய அரசியலுக்கு ஒரே மாற்று தவெக. இங்கு கடனை உருவாக்கி ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய ஒவ்வொருவர் தலையிலும் 9 லட்சம் கோடி இருக்கிறது. கேட்டால் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது 10 லட்சம் கோடியை கொண்டு வந்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். எல்லாமே மீடியா செட்டிங்க். செட்டிங்க் தவிர வேற எதுவுமே தெரியாது. என் தலைவரை பார்த்து நடிகர் என்று சொல்கிறீர்களே. உங்களுக்கு அவர் சொன்ன பதில், ‘என் வாழ்க்கையில் ஒரே ஒரு கமிட்மட் இருக்கிறது. அது முடிந்தவுடன் என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக’ என்று கூறிவிட்டார்.

ஆனால், என் தலைவரை பார்த்து நீங்கள் ஏன் நடித்து கொண்டிருக்கிறீர்கள். அதுவும் அவர் போடுகிற பேண்ட் சட்டையை மாற்றி நடித்தால் கூட பரவாயில்லை. இதியிலிருந்து சொல்வதென்னவென்றால். தலைவருக்கு முதல்வரும் ரசிகர்தான்.

நாம் அனைவரும் அண்ணன் என்றுதான் கூறுவோம். ஆனால், அடுத்த நாளே வாரிசு, பிறப்பால் பதவி அடைந்தவர் அண்ணன் என்று பேச ஆரம்பித்துவிட்டார். தூக்கத்தில் கூட ஆளும் கட்சிக்கு நடப்பது என்னவென்றால், இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது.

இது என்ன களிமண்ணா?... ரசிகர் கூட்டம். இப்படிதான் எம்ஜியாரை சொன்னீர்கள்.77 லிருந்து 89 வரை திமுக வரவில்லை. எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்வரை திமுகாவால் வர முடியவில்லை. ஏளனம் பேசுவதை நிறுத்துங்கள், ஒருவரை ஒருமையில் பேசுவதை நிறுத்துங்கள்.

நம்பர் 1 விஜய் மக்கள் ஆதரவு இல்லாமல் நம்பர் 1 ஆக முடியாது. தன்னுடைய பொருளாதாரத்தை தூக்கி எறிந்தவர்களை மக்கள் ஏற்பார்கள். நாங்கள் சிறைக்கும் செல்வோம். செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் செல்வோம். கூட்டணி கணக்குகள் எல்லாம் செல்லாது. மக்கள் ஆதரவு முக்கியம். ரூ 1000 கொடுத்துவிட்டு ரூ 10,000 பறிக்கிறது திமுக அரசு. அண்ணா, எம்ஜிஆர் ஏற்படுத்தியதுபோல அடுத்தபிளவு காத்திருக்கிறது. எம்ஜிஆர் பண பலத்தால் வரவில்லை. மக்கள் பலத்தால் வந்தார். எங்களிடம் பணம் இல்லை. மக்கள் பலம் இருக்கிறது. விஜயைக் கண்டு திமுகவிக்கு பயம் இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் எங்களோடு இணைந்து செயல்படுவார். தவெகவுக்கு வர பல தலைவர்கள் காத்திருக்கிறார்கள்.” என்று பேசியுள்ளார்.