தமிழ்நாடு

துப்பாக்கிச்சூட்டில் பலி: பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு

துப்பாக்கிச்சூட்டில் பலி: பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு

webteam

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய  உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தையா, ஷண்முகம், மணிராஜ், ஸ்நோலின், வினிதா தாளமுத்து நகரைச் சேர்ந்த கிளாஸ்டன், ஆண்டனி செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த தமிழரசன் ஆகியோரும் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.