தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிசிஐடி விசாரணை நாளை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிசிஐடி விசாரணை நாளை தொடக்கம்

Rasus

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர் நாளை விசாரணையை தொடங்குகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், வடபாகம் மற்றும் சிப்காட் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் பதியப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு டி.ஜி.பி உத்தரவிட்டார்.

இதனையடுத்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக தூத்துக்குடி காவல்நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டு இருந்த வழக்குகள் முறைப்படி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர் நாளை விசாரணையை தொடங்குகின்றனர்.