தமிழ்நாடு

தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Rasus

மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் இருந்து விமானம் மூலம் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி சென்றார். அப்போது கனடாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டுள்ள சோபியா, அந்த விமானத்தில் பெற்றோருடன் வந்து கொண்டிருந்தார். தமிழிசையின் பின் இருக்கையில் பயணித்த சோபியா, பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கம் எழுப்பியதாக கூறப்பட்டது. தொடர்ந்து விமான நிலைய வளாகத்திற்குள்ளும் பாரதிய ஜனதாவை விமர்சித்துள்ளார். இதன் காரணமாக விமானநிலையத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஜாமீன் கோரி சோபியா மனுத்தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் தந்தை தொடுத்த புகாரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கையை நவம்பர் 20-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.