தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் பணிகள் எப்போது முடியும் என விமான நிலைய இயக்குநர் தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன் கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. இதன் பின்னர் இரவு நேர விமான சேவை தொடங்கும் என்றார்.
விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்காக தமிழக அரசிடமிருந்து நிலம் பெறப்பட்டுள்ளது. விரிவாக்கத்திற்கு விமான நிலைய ஆணைய தலைவரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி விரைவில் கிடைக்கும். அதன் பின்னர் விரிவாக்க பணி தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் முழுப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின் ஒரே சமயத்தில் 300 பயணிகள் வரவும், செல்லவும் ஏற்றபடி விமானங்கள் இயக்கப்படும் என்றார்.