2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலி  pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி | விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலி

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே 2-வயது குழந்தை அண்டா-வில் உள்ள தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு. பசுவந்தனை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ராஜன்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் - காஞ்சனாதேவி தம்பதியினர். இவர்களது இரண்டு வயது மகள் சபீனா பானு என்ற குழந்தை அண்டா-வில் நிரம்பியிருந்த தண்ணீரில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அண்டா தண்ணீரில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது குழந்தை.

இதையடுத்து சிறிது நேரம் கழித்து குழந்தையை காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது அண்டா தண்ணீரில் கிடந்த குழந்தையை மீட்டு பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.