தேவாலயத்தில் சிக்கிய 8 பேர், நான்கு மணிநேர போராட்டத்திற்குப் பின் இரண்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரால் மீட்டகப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான துரிஞ்சல் ஆறு செல்கிறது. இந்த நிலையில் ஆற்றின் கரை பகுதியில் அமைந்ந்துள்ள தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு, நான்கு பேரும், அவர்களை மீட்கச் சென்ற நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், நள்ளிரவில் அவர்களை மீட்க வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஐந்து மணிநேர போராட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் பகுதியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் 4 மணிநேரம் போராடி பைபர் படகு மூலமாக தேவாலயத்தில் இருந்த 8 பேரையும் பத்திரமாக மீட்டனர். பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.