தமிழ்நாடு

261 வாக்கு வித்தியாசம்: கரூரில் செந்தில் பாலாஜி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி!

261 வாக்கு வித்தியாசம்: கரூரில் செந்தில் பாலாஜி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி!

jagadeesh

கரூர் சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி - அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி - அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். இப்போது செந்தில் பாலாஜி 261 வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார்.