ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரண்டாவது சுற்றிலும் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார். இதையடுத்து தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார். முதல் சுற்று முடிவில் டிடிவி 5,339 வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார்.
இரண்டாவது சுற்றிலும் அவரே முன்னிலை பெற்றார். அப்போது அதிமுக - டிடிவி தினகரன் தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாற்காலிகள் தூக்கி வீசி ஏறியப்பட்டன. தேர்தல் அலுவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருந்தது. பின்னர் தொடங்கியது.
டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் அவரது ஆதரவாளர்கள் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.