தமிழ்நாடு

ஆர்.கே.நகர் வெற்றி எனக்கானது அல்ல: சென்னை திரும்பிய டிடிவி பேட்டி

ஆர்.கே.நகர் வெற்றி எனக்கானது அல்ல: சென்னை திரும்பிய டிடிவி பேட்டி

webteam

ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ள டிடிவி தினகரன், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 6 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்திலும் டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரண்டாவது இடத்திலும் திமுக மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் மதுரையில் இருந்து டிடிவி தினகரன் விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் கூறும்போது, ‘ஆர்.கே.நகர் வெற்றியானது எனக்கு அல்ல, தமிழக மக்களுக்கானது. தொண்டர்கள் இல்லை என்ரால் நாங்கள் இல்லை. இரட்டை இலை யாரிடம் இருக்க வெண்டும் என்பதை மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்’ என்றார்.