தமிழ்நாடு

தவறு செய்தவர்களுக்கு காலம் பதில் சொல்லும் - டிடிவி தினகரன்

தவறு செய்தவர்களுக்கு காலம் பதில் சொல்லும் - டிடிவி தினகரன்

webteam

கட்சியின் தலைமை அலுவலகத்தில் எங்கள் பேனர்களை அகற்றி மிகப்பெரிய தவறைச் செய்து இருக்கின்றனர். காலம் அதற்கு பதில் சொல்லும் என அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது, சசிகலாவின் ஆணையை ஏற்று, அவர் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன். 'நீங்கள் கட்சியிலிருந்து ஒதுங்க வேண்டும்' என்று அமைச்சர்கள் கூறியதால், கட்சியின் நலனுக்காக ஒதுங்கிக் கொண்டேன்.

நான் ஒதுங்கியப்பின் கட்சி எந்த நலனும் பெற்றதாக தெரியவில்லை. கட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதனால்தான் கட்சியை காப்பாற்ற முடிவு செய்து வந்திருக்கிறேன். இன்று அமைச்சர்கள் சர்வ அதிகாரம் படைத்தவர்களாக இருக்கின்றனர். அனைத்து முடிவுகளையும் அவர்களே எடுக்கின்றனர். வாய்க்கு வந்தபடி ஏதோதோ பேசிக்கொண்டிருக்கின்றனர்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் எங்கள் (சசிகலா- தினகரன்) பேனர்களை அகற்றி மிகப்பெரிய தவறு செய்திருக்கின்றனர். அதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.

அந்தத் தவறைச் செய்தவர்கள், தவறை உணர்ந்து திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

யாரை வேண்டுமானாலும் ஒதுக்கி வைத்துவிட்டு செயல்படலாம் என்று அமைச்சர்கள் நினைக்கின்றனர். காலம் அதற்கு பதில் சொல்லும்.

நான் யாருக்கும் எதிர்ப்பாக இல்லை, என்னை எதிரியாக நினைப்பவர்களுக்கும் நான் எதிராக இல்லை. எனக்கு எதிராக செயல்பட்டு யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று நம்புகிறேன் என்று டிடிவி தினகரன கூறினான்