தமிழக அரசியல் நிலையை கண்டு டெல்லியில் சிரிக்கிறார்கள் என்றும், அதிமுகவுக்கு தினகரனை தலைமை ஏற்க வருமாறு கூறுவது வேடிக்கையாகவும், காமெடியாகவும் உள்ளது என்றும் எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
இன்று மதுரை விமான நிலையத்தில் எம்.பி. சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுகவுக்கு தினகரனை தலைமை ஏற்க வருமாறு கூறுவது வேடிக்கையாகவும், காமெடியாகவும் உள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கையை தருகின்றனர். அவர்கள் உண்மை தன்மையை அறிய வேண்டும்.
அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியை தக்க வைத்துக் கொள்ள சசிகலா வெளியில் இருந்த போது சின்னம்மா என்பதும், சிறையில் இருக்கும் போது தூக்கி எறிந்து பேசும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் நிலையை கண்டு டெல்லியில் சிரிக்கிறார்கள். மீதி உள்ள 4 வருட ஆட்சியிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள் என்று அவர் கூறினார்.