தமிழ்நாடு

விதிப்படியே பொதுச்செயலாளர் நியமனம்: சசிகலா தரப்பு

webteam

கட்சி விதிகளின்படியே தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா தரப்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும், அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கூறி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பிக்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இதுதொடர்பாக பிப்ரவரி 28ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அனுப்பியுள்ளார். அதில், கட்சி விதிகளின்படியே அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.